HVP தடுப்பூசி போட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
#SriLanka
#Hospital
#Vaccine
#School Student
Mayoorikka
9 months ago

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HVP தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குருவத்தோட்ட வெனிவேல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியில் ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த பாடசாலையில் 7ஆம் வகுப்பில் பயிலும் 26 மாணவிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியிருந்தது.
தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.



