விவசாயத்தை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்கு கொண்டுவர திட்டமிடும் ஜனாதிபதி!

#SriLanka #sri lanka tamil news #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
விவசாயத்தை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்கு கொண்டுவர திட்டமிடும் ஜனாதிபதி!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்படாத விவசாயத்தை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்கு கொண்டு வருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கிராம அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அவதானித்த ஜனாதிபதி, அந்தத் திட்டங்கள் ஓரளவுக்கு வெற்றியளிக்குமாயின் வறுமை எந்தளவிற்கு தீர்ந்தது என்பது கேள்விக்குறியே எனவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களின் பிரதான இலக்கானது கிராமிய வறுமையை ஒழிப்பதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை