கனடாவில் முதியவர்களிடம் பண மோசடி செய்த நபர் கைது

#Arrest #Canada #money #Fraud
Prasu
10 months ago
கனடாவில் முதியவர்களிடம் பண மோசடி செய்த நபர் கைது

ஒன்றாரிய மாகாணத்தில் முதியவர்களை ஏமாற்றி அவர்களிடம் பண மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாண பொலிஸார் கூட்டாக இணைந்து முன்னெடுத்து வந்த விசாரணைகளின் ஒரு கட்டமாக இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வயோதிபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் 14 பேருக்கு எதிராக 56 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 இந்த நபர்கள் 126 கனடிய முதியவர்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஏழரை லட்சம் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!