பொதுத் தேர்தலில் அதிகளவு களம் காணும் இளம் கலைஞர்கள்!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் கலைஞர்கள் அரசியலில் பிரவேசிப்பதுடன், முதல் தடவையாக பல கலைஞர்கள் களத்தில் இறங்குவதையும் இலங்கை காணவுள்ளது.
இலங்கையின் மூத்த நடிகர் கமல் அதரராச்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முடிவை அறிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஸ்தாபக தலைவர் மறைந்த ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தலைமையிலான தேவான பரபுர கட்சியில் போட்டியிடவுள்ளதாக அதரராச்சி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை தமிதா அபேரத்ன பொதுத் தேர்தலில் இரத்தினபுரியில் சமகி ஜன பலவேகய (SJB) கீழ் போட்டியிட உள்ளார்.
இதேவேளை, நடிகர் ஜகத் மனுவர்ண கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.