சித்திரவதையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை

#SriLanka #Police #AnuraKumaraDissanayake
Mayoorikka
10 months ago
சித்திரவதையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை

சந்தேகநபர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை செயற்படுத்துமாறு ஊடக அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

 சட்டவிரோத கைதுகள், தடுப்புகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்புகள் பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், பொலிஸாரினால் அவை செயற்படுத்தப்படாத நிலையில் பொலிஸாரின் அடாவடித்தனம் தொடர்வதாக, இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கடந்த சில ஆண்டுகளில், மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரின் அட்டூழியத்திற்கு எதிராக 51 தீர்ப்புகளையும், 14 வழக்குகளில் சந்தேகநபர்களை சித்திரவதை செய்ததாக 25ற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது.

 தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தெரிவாவதற்கு முன்னர், ஓகஸ்ட் 22ஆம் திகதி விசாரணைக்கு வந்த அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், “ஒரு தீர்ப்பு எழுதி, பேனாவின் மை காய்வதற்குள், இதேபோன்ற மற்றொரு சம்பவம் பதிவு செய்யப்படுகிறது” எனக் கூறியது.

 ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் உள்ள ஜாதுன் கமகே பிரியந்த என்ற இளைஞனால் தனது அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில், பொலிஸாரின் சித்திரவதை தொடர்பான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பாரிய பொறுப்பு உண்டு என இளம் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 “பொலிஸின் தலைமையும், உயர் நிர்வாகமும் இந்த நிலைமையை உன்னிப்பாகக் அவதானிக்க வேண்டும். தலைமைப் பொறுப்பிற்கு, பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாத்திரமன்றி, பொலிஸ் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சர், அதற்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சின் செயலாளரும் அடங்குவார். 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.” இது தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன வினவிய போது, பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 "தற்போதுள்ள சூழ்நிலை சரியாக கையாளவில்லை என்றால், சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனை நிறுத்தப்படாவிட்டால், இந்த நீதிமன்றத்தின் எதிர்கால முடிவுகளில் பொலிஸின் தலைமை மற்றும் உயர் நிர்வாகத்திற்கு எதிரான தடைகள் காணப்படலாம். 

சித்திரவதை, கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனையை இலங்கையின் சட்ட அமுலாக்க மற்றும் குற்றவியல் விசாரணைச் செயற்பாட்டில் அகற்றுவதில் அவர்கள் தோல்வியடைந்ததன் அடிப்படையில் இது அமையும்” என இளம் ஊடகவியலாளர் எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!