திருகோணமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழரசு கட்சி!

#SriLanka #TNA
Dhushanthini K
10 months ago
திருகோணமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழரசு கட்சி!

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் உள்ள எஸ்.சிறிதரனின் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ளஅவர்,  ஏற்கனவே யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் நியமனங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்று வன்னி மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களுக்கான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான நியமனப்பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.     

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனு நாளைய தினம் தாக்கல் செய்வோம்” எனக் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!