முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்!

#SriLanka
Dhushanthini K
10 months ago
முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்!

ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்கள் திருத்தம் செய்யப்படுவதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. 

ஒக்டோபர் 3ஆம் திகதி முச்சக்கர வண்டி கட்டண மீளாய்வுக் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், கட்டண திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 புதிய கட்டணங்களின்படி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 100, இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம்  85 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளது.  புதிய கட்டணங்கள் மீட்டர் டாக்சி முறைக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

மேலும் திருத்தப்பட்ட கட்டணங்கள் முச்சக்கர வண்டியின் முன் இடது பக்கத்தில் பயணிகள் பார்க்கும்படி தெளிவாகக் காட்டப்பட வேண்டும். 

 புதிய கட்டணங்களுக்கு இணங்குவதை கண்காணித்து, அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!