யாழ் மற்றும் கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள் - கீதாநாத் காசிலிங்கம் கவலை

#Jaffna #Kilinochchi #Alcohol #shop
Prasu
9 months ago
யாழ் மற்றும் கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள் - கீதாநாத் காசிலிங்கம் கவலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசியல் சபை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சமீபகாலமாக பல மதுபானக் கடைகள் தோன்றுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் பரந்தன் சந்தி தொடக்கம் இரணைமடு சந்தி வரையிலான மதுபானசாலைகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

"பெரும்பான்மையான மக்கள் தினசரி ஊதியம் பெறுபவர்களைக் கொண்டுள்ளனர், மேலும் மதுக்கடைகளின் பெருக்கம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முன்னாள் ஆட்சியாளர்களால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், புதிய ஜனாதிபதி தலையிட்டு, மீளாய்வு செய்து, தேவையற்ற மதுபான நிலையங்களை மூடுவதற்கு சாத்தியமுள்ளதாக வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!