அரச பரீட்சைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு - திட்டமிட்டபடி பரீட்சைகள் நடக்குமா?

#SriLanka #government #President #Ministry of Education #School Student #Examination #ImportantNews #L4
Lakhi
4 months ago
அரச பரீட்சைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு - திட்டமிட்டபடி பரீட்சைகள் நடக்குமா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் சவால்கள், எதிர்வரும் அரச பரீட்சைகளில் ஓரளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

16 பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக நாட்டின் மின்சக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஆணையாளர் நாயகம், தற்போது நிலவும் மின்சக்தி மற்றும் எரிபொருள் சிக்கல்கள் காரணமாக, திட்டமிடப்பட்டுள்ள அரச பரீட்சைகளை நடத்துவதில் சில சவால்கள் அல்லது தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

மின்சக்தி நுகர்வைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு மாற்று வழிகளைத் தேடி வரும் நிலையில், மாணவர்களின் பரீட்சை விவகாரத்திலும் இவ்வாறானதொரு நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4