09 மாவட்டங்களில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
#SriLanka
#Election
Thamilini
1 year ago
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி, கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் சுயலாப அரசியலுக்காக ஸ்ரான்ட் இல்லாத மோட்டார் சைக்கிள் போல் தேர்தலில் கூட்டு சேரமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.