முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை சந்தித்த ஜனாதிபதி!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
10 months ago

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்படி, கியூபா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.



