ஆயுதப் படையினருக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி அனுர!
#SriLanka
#AnuraKumara
Mayoorikka
10 months ago

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை அழைக்கும் உத்தரவு அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டுள்ளது.



