தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் சிக்கல் நிலை குறித்து மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் பங்களிப்புடன் விசாரணை!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அண்மையில் நிறைவடைந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் சிக்கல் நிலை குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்படும் என பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய பிள்ளைகளின் பெற்றோர் குழுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளனர்.
மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தினால் பிள்ளைகள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள் என பெற்றோர்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.