லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் பதவி விலகல்!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதித பீரிஸ் 2022 ஜூன் 13 அன்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பணியாற்றத் தொடங்கினார். எரிவாயு கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக அப்போதைய தலைவர் இராஜினாமா செய்ததையடுத்துமுதித பீரிஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
முதித பீரிஸ் இதற்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.