திலித்துடன் இணைந்தார் திலும்! கொடுக்கப்பட்டது அமைப்பாளர் பதவி
#SriLanka
Mayoorikka
1 year ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம , திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக வியாழக்கிழமை (26) பொறுப்பேற்றார்.
அதற்கான நியமனக் கடிதம், கொழும்பில் உள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த, தாயக மக்கள் கட்சியின் தலைவரும், தொழில்முனைவோருமான திலித் ஜயவீர,
"சகோதரர் திலும் அமுனுகம இன்று எம்முடன் எமது கட்சியின் தேசிய அமைப்பாளராக இணைந்து கொள்கிறார்." என்றார்.