பிரான்சில் பாடசாலை பேருந்து விபத்து - 15 மாணவர்கள் காயம்

#School #Student #Accident #Hospital #Bus
Prasu
11 months ago
பிரான்சில் பாடசாலை பேருந்து விபத்து - 15 மாணவர்கள் காயம்

பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 வரையான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

Meaux (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் பிற்பகல் 4 மணி அளவில் இடம்பெற்றது. பாடசாலைமாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. 

பேருந்தில் பயணித்த 12 தொடக்கம் 14 வயதுடைய பதினைந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், ஏனைய 39 பேர் காயங்களின்றி தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக தீயணைப்பு படையினர் களமிறங்கி, மாணவர்களை மீட்டனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சாரதிக்கு மதுபோதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மது அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!