சூப்பர் ஸ்டாரை சந்தித்த வித் லவ் படக்குழுவினர்
#Actor
#Actress
#TamilCinema
#Movie
#RAJINIKANTH
Prasu
1 month ago
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது.
இத்திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் உரையாடியது, அவர்களை வெகுவாக பாராட்டியது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
(வீடியோ இங்கே )