ஒன்றாரியோ மாகாணத்தின் சென் ஜோசப் வைத்தியசாலை செல்வோருக்கான முக்கிய அறிவுறுத்தல்
#Covid 19
#Canada
#Hospital
#Face_Mask
Prasu
1 year ago
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சென் ஜோசப் வைத்தியசாலையில் முகக் கவசங்கள் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை அடிப்படையில் இவ்வாறு முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு வருகை தருவோருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய நடைமுறை பலருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்ற போதிலும் நோயாளிகளையும் சுகாதாரப் பணியாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏனைய சுகாதார பழக்க வழக்கங்களையும் ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.