பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் இன்று!
#SriLanka
#Election
Mayoorikka
1 year ago
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும், அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று காலை முதல் இடம்பெறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 லட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.