தேர்தலுக்கு முன்னதாக சதித் திட்ட முயற்சி இடம்பெறும் - அனுர எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இன்னும் சில தினங்களில் சதித்திட்டங்களில் ஈடுபட சில சக்திகள் முயற்சிக்கும் சாத்தியம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நிச்சயமாக எங்கள் நோக்கம் அதிகாரத்தைப் பெறுவதுதான். எங்களால் வெற்றி பெற முடியும்” என்றார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தாங்கள் புதிதாக எதுவும் திட்டமிடவில்லை என்றும், அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எமக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் சதித்திட்டங்கள் தொடர்பாக சமூகத்திற்கு உண்மைகளை முன்வைப்பதுடன், தமது உண்மைகளை மீண்டும் மீண்டும் முன்வைப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.