ராகம பகுதியில் தடம் புரண்ட ரயில்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயில் ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான ரயில் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
ராகம சந்தியை கடந்து செல்லவிருந்த அனைத்து ரயில்களும் காலதாமதமாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.