ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - ரணிலின் திட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அடுத்த வருடம் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் `புலுவன் ஸ்ரீலங்கா' என்ற கருத்தினை வலுப்படுத்தும் நோக்கில் மற்றுமொரு பொதுப் பேரணி நேற்று (14.09) மாத்தளை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இப்போது பணம் இருப்பதால், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீங்கும்.
இப்போது நீங்கள் ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கலாம். அடுத்த ஆண்டு, நாங்கள் இன்னும் அபிவிருத்தி செய்வோம். ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவோம்." எனத் தெரிவித்துள்ளார்.