கனடாவை அச்சுறுத்தும் உயிராபத்தான நோய் தொடர்பில் எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கனடாவை அச்சுறுத்தும் உயிராபத்தான நோய் தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவில் ஒட்டோவா பகுதியில் நுளம்பு கடிக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுளம்பு கடியினால் ஏற்படக்கூடிய வைரஸ் ஒன்றினால் குறித்த நபர் உயிரிழந்து உள்ளதாக ஒட்டாவா பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

நுளம்பு கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதார அலுவலகம் பொதுமக்களை கோரியுள்ளது.

பெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் ஈஸ்டர்ன் இக்குவின் என்சிபலிடிஸ் ஆகிய வைரஸ் தொற்றுக்களினால் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்த நபரின் மரணத்திற்கான காரணம் நுளம்பு கடியினால் ஏற்பட்ட வைரஸ் தாக்கம் என ஆய்வு கூட பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

குதிரைகள் போன்ற வேறும் விலங்குகளுக்கும் இந்த நோய் தொற்று பரவும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இந்த வைரஸ் பரவக்கூடியது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது எனவும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பு கடியில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!