செல்வந்த நிலையில் இருந்து வீழ்ச்சி அடையும் கனடா

#Canada
Prasu
1 year ago
செல்வந்த நிலையில் இருந்து வீழ்ச்சி அடையும் கனடா

உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் கனடா உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் ஏனைய செல்வந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அண்மைக்காலமாக கனடா செல்வந்த நிலையில் இருந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த காலத்தில் கனடா இருந்த வலுவான செல்வந்த நிலையில் இருந்து பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செல்வந்த நிலை தொடர்பான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சனத்தொகை வளர்ச்சியுடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறிப்பாக செல்வந்த நாடுகளில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி நிலைமை போதுமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!