கடலுக்கு செல்ல வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

#SriLanka #weather #Fisherman
Mayoorikka
1 year ago
கடலுக்கு செல்ல வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கொந்தளிப்பாக காணப்படும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

 இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!