பிரித்தானியாவின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனை சந்தித்த சிறிதரன் எம்பி!

#SriLanka #Britain #sritharan
Mayoorikka
1 week ago
பிரித்தானியாவின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனை சந்தித்த சிறிதரன் எம்பி!

பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான சந்திப்பு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம்(03) நடைபெற்றுள்ளது.

 தமிழ் மக்களின் மீது இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலை, அதற்கான நீதிப் பொறிமுறை, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால இன ஒடுக்குமுறைகள், மக்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் நோக்கிய அரசியல் முன்னகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

 குறித்த சந்திப்பில், பிரித்தானிய தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி சென் கந்தையா மற்றும் பிரித்தானியாவின் சிரேஷ்ட சட்டத்தரணிகளுள் ஒருவரான கணா கணநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.