ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,200 ஆக உயர்வு
#SriLanka
#prices
Prasu
1 year ago
இலங்கையில் இஞ்சியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அண்மைக் காலமாகப் பெய்த பலத்த மழைக் காரணமாகப் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது