நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் நோய் நிலைமை! சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #Minister
Mayoorikka
1 year ago
நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் நோய் நிலைமை! சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வயது முதிர்ந்தவர்களில் 45 வீதத்துக்கும் அதிகமானோர் இரத்த அழுத்த நோயாலும் 24 வீதமானோர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் இரத்த அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் பெரும்பாலாக காணப்படுகின்றனர் எனவே, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தல் செயற்றிட்டத்துக்காக எதிர்வரும் வருடங்களில் அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

 அதேவேளை, ஆரம்ப சுகாதார சேவைக்கு ஒதுக்கப்படும் நிதியை அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மேலாக நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்ப டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!