நிர்மாணத்தொழிலில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டங்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நிர்மாணத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிபுணர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு தேவையான கட்டளைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் தொனிப்பொருளில் நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களின் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.