யாழில் நடைபெற்ற GLOBAL LEADERSHIP SUMMIT 2024

#SriLanka #Jaffna #Summit
Prasu
1 year ago
யாழில் நடைபெற்ற GLOBAL LEADERSHIP SUMMIT 2024

GLOBAL LEADERSHIP SUMMIT 2024 இவ்விழாவானது இன்று யாழ் உரும்பிராய் இராஜேஸ்வரி மண்டபத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகைதந்த விருந்தினர்களோடும் விருதாளர்களோணும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பல்துறையாளர்களின் திறமைக்கு நல்லதொரு களம் அமைக்கும் வகையில் 130விருதாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவையாளர்,எழுத்தாளர் ரீதியில் எமது தலைமையின் மதிப்புக்கு அமைய மங்கள விளக்கேற்ற அழைக்கப்பட்டேன்.

பின்பு மதிய உணவுடனும் புதிய நண்பர்களின் உரையாடல்களுடனும் நிகழ்வு நடைபெற்ற தருணத்தில் மதிய உணவிற்காக அழைக்கப்பட்டோம்.

images/content-image/1724016897.jpg

இவ்வாண்டுக்கான சிறந்த சர்வதேச கலைஞர் விருது 2024ஐ கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அவர்கன் கரங்களால் பெற்றது. மகிழ்வே.இன்று காலை தொடங்கிய நிகழ்வை பின்னேரம் முடிவடையும் வரை ஓர் அமைச்சராய் இருந்தும் தன் பொன்னான நேரத்தை எம்முடன் பகிர்ந்தார்.

மேலும் பல்வேறு சமூக சேவை விடயங்களையும் கல்வியின் போக்குகள் பற்றியும் கதைத்தார். இவ்வாறான அமைச்சர் நம் இளைய சமுதாயத்திற்கு கிடைத்திருப்பது வரம். அன்பும் நன்றியும். இவ் உச்சி மாநாடு விருதுவிழாவில் சமாதானம், தலைமை,அமைதி,ஒழுக்கம்,இளைய குழுக்களுக்கு நன்றாக கல்வியை மேம்படுத்தவேண்டுமென்ற பல்வேறு விடயமும்.வாழ்வியல் கோட்பாடுகளும் பேசப்பட்டது.

இவ் மதிப்பிற்குரிய விருதைப் பெற என்றும் ஆதரவாயிருக்கும் பெற்றோருக்கும் ,புலம்பெயர்ந்தும் என் கலைப்பயணத்தில் ஆதரவு தரும் அனைத்து உள்ளங்களுக்கும் இவ்விடத்தில் நன்றி உரித்தாகுக.

images/content-image/1724016912.jpg

images/content-image/1724016925.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4