பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கனடா!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று (09.08) நடைபெற்ற ஆடவருக்கான 4x100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் தற்போதைய உலக சாம்பியனான அமெரிக்காவை வீழ்த்தி கனடா தங்கப் பதக்கத்தை வென்றது.
பலம் வாய்ந்த அமெரிக்க அணி இங்கு தங்கப்பதக்கத்தை எளிதாக வெல்லும் என கணிக்கப்பட்ட பின்னணியில் இவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கனடா அணி 37.50 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தது. ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் கனேடிய அணி தங்கப் பதக்கம் வெல்வது 28 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
இதற்கிடையில், இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தென்னாப்பிரிக்கா (37.57 வினாடிகள்) வென்றது, வெண்கலப் பதக்கத்தை கிரேட் பிரிட்டன் (37.61 வினாடிகள்) வென்றது.



