பாரிஸில் போலி ஒலிம்பிக் பதக்கங்களை விற்பனை செய்த நபர் கைது

#Arrest #Fraud #Medals #Olympics #Paris
Prasu
11 months ago
பாரிஸில் போலி ஒலிம்பிக் பதக்கங்களை விற்பனை செய்த நபர் கைது

போலி ஒலிம்பிக் பதக்கங்களை விற்பனை செய்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பார்ப்பதற்கு அச்சு அசல் ஒலிம்பிக் பதக்கங்களைப் போன்று காட்சியளிக்கும் இவை, ஒன்று €1,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இம்மாதம் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இந்த போலி பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தங்கள், வெள்ளி, வெண்கல முலாம் பூசப்பட்ட 850 பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 அவருக்கு ஆறுமாத கால சிறைத்தண்டனையும், €3,750 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!