கெஹெலியவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

#SriLanka #Court Order #KehaliyaRambukwella #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
கெஹெலியவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 இந்த வழக்கு இன்று (09) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நோக்கங்களுக்காக  ஒரு மில்லியன் ரூபாய் செலவில் 600 ஜி.ஐ. குழாய்களை வாங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குறித்த மூவர் மீதும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது. 

இந்த வழக்கில்  முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4