சவுதி மன்னர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இடையே தொலைபேசி பேச்சுவார்த்தை
#France
#President
#saudi
#conversation
Prasu
1 year ago
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையை 'தணிக்கும்' முகமாக, சவுதி மன்னரை தொலைபேசிவழியாக அழைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உரையாடியுள்ளார்.
இன்று இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
ஐக்கிய அரசு இராச்சியத்தின் மன்னர் Mohammed bin Zayed இனை அழைத்த மக்ரோன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஆயுத விரிவாக்கலை தடுத்து நிறுத்துமாறும், அதன் வீரியத்தை தணிக்குமாறும் கோரியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், சவுதி அரேபிய பிரதமர் Mohammed bin Salman இனையும் தொடர்புகொண்டு உரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் - ஈரான், லெபனான் போன்ற ஹிஸ்புல்லா அமைப்பின் கூட்டாளி நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.