கனடாவில் புதிய வீடுகளுக்கு வரிச் சலுகை வழங்குமாறு கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை
#Canada
#Vat
#House
Prasu
11 months ago

கனடாவில் புதிய வீடுகளுக்கு வரிச் சலுகை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண கட்டுமான நிறுவனங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. புதிதாக வீடுகளை நிர்மாணிக்கும் போது அறவீடு செய்யப்படும் வரி தொகையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இது வீடுகளை கொல்வனம் செய்பவரின் கொள்வனவு இயலுமையை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
18 கட்டுமான நிறுவனங்கள் கூட்டாக இணைந்து எதிர்வரும் 10 ஆண்டுகால பகுதியில் சுமார் ஒரு லட்சம் புதிய வீட்டு அலகுகளை நிர்மாணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



