பாரீஸுக்கு செல்வதை தவிர்க்கவும் : சுவிட்சர்லாந்து ரயில்வே அமைச்சகம் ஆலோசனை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரான்சின் சில பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு சுவிஸ் பெடரல் ரயில்வே அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் லாசேன் மற்றும் ஜெனீவாவிலிருந்து பாரீஸ் செல்லும் அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை, பேசல் மற்றும் சூரிச்சிலிருந்து பாரீஸ் செல்லும் ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ரயில்களில் பயணிப்பதற்காக ஏற்கனவே டிக்கெட் வாங்கிய பயணிகள், அதற்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.