சுவிட்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

#Covid 19 #Covid Vaccine #Switzerland
Prasu
11 months ago
சுவிட்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா அலை ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு கொரோனா அலை பரவிவருகிறது. தற்போது பரவும் கொரோனா மாறுபாடு தீவிரமானது அல்ல. என்றாலும், மக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புகிறார்கள்.

ஆனால், தற்போதைய விதிப்படி, சுவிட்சர்லாந்தில் மருந்தகங்கள் தாங்களே தடுப்பூசி ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளவேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், எவ்வளவு தடுப்பூசி ஆர்டர் செய்யவேண்டும் என்பதில் சற்று குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

அதாவது, இஷ்டத்துக்கு தடுப்பூசிகளைவாங்கிக் குவிக்கமுடியாது. ஒரு தடுப்பூசி டோஸின் விலை 80 சுவிஸ் ஃப்ராங்குகள். இதுபோக ஊசி வாங்குவது, மருத்துவருக்கான கட்டணம் என ஒரு தடுப்பூசிக்கு ஓரளவு பெரிய தொகையை மக்கள் செலவு செய்யவேண்டியுள்ளது.

ஆகவே, எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்பதை கணக்கிட இயலவில்லை. அத்துடன், அதிக அபாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி பெற காப்பீடு உண்டு, மற்றவர்களுக்கு கிடையாது. 

ஆக, ஒரு பக்கம் தடுப்பூசி தட்டுப்பாடு, மறுபக்கம் எவ்வளவு தடுப்பூசி ஆர்டர் செய்வது என தெரியாமல் திகைக்கும் மருந்தகங்கள் என குழப்பமான ஒரு சூழல் நிலவுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!