பாரிஸ் விமான நிலையத்தில் 107 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மீட்பு
#Arrest
#France
#Airport
#drugs
#Paris
Prasu
1 year ago

Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் வைத்து 107 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
2E முனையம் வழியாக (terminal) வகை தந்த பயணி ஒருவரது பயணப்பெட்டி சோதனையிடப்பட்டபோது, அதில் நன்றாக பொதிசெய்யப்பட்ட 107 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.
அதையடுத்து குறித்த பயணி கைது செய்யப்பட்டார். அவர் Fort-de-France இல் இருந்து பரிசுக்கு வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சுங்கவரித்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சென்ற 2023 ஆம் ஆண்டில் பிரெஞ்சு சுங்கவரித்துறை 12 தொன் எடையுள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



