பிரான்ஸ் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா உள்ளதாக குற்றச்சாட்டு
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பிரான்சின் அதிவேக தொடருந்து வலையமைப்பு மீதான தாக்குதல்களின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் பரபரப்பு செய்திகள் வெளியிட்டுள்ளன.
நேற்று (26.07) காலை முதல் பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் TGV அதிகவேக தொடருந்துகள் சேவைத்தடையை சந்தித்தித்துள்ளன.
நேற்று நள்ளிரவின் பின்னர், பல்வேறு இடங்களில் தொடருந்து சமிக்ஞை கம்பிகளை எரிக்கப்பட்டும் தண்டவாளங்கள் சேதப்படுத்தப்பட்டும் இருந்தன.
அதையடுத்து தொடருந்துகளின் இருவழி போக்குவரத்துக்களும் தடைப்பட்டன.
இந்நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா செயற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.



