பாரிஸில் உணவகத்திற்குள் புகுந்த கார் - ஒருவர் பலி
#Death
#France
#Accident
#Paris
Prasu
1 year ago

கார் ஒன்று அதிவேகமாக பயணித்து உணவகம் ஒன்றுக்குள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். 20 ஆம் வட்டாரத்தின் avenue du Père-Lachaise வீதியில் உள்ள உணவகம் ஒன்றின் முற்றத்தில் (terrasse) பலர் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருக்கும் போது, வேகமாக வந்த கார் ஒன்று அவர்களை மோதித்தள்ளியுள்ளது.
இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர், மருத்துவ குழுவினர் அழைக்கப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டார்.



