பஞ்சாப்பில் அனைத்து சமூக வலைதள சேவையும் 6 நாட்களுக்கு தடை

#Pakistan #Social Media #Banned #Punjab
Prasu
1 year ago
பஞ்சாப்பில் அனைத்து சமூக வலைதள சேவையும் 6 நாட்களுக்கு தடை

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் 6 நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

 இதன் மூலம் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவதை தடுக்கலாம் என அந்த அரசு கருதுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!