மாங்கல்ய பாக்கியம் பெற இந்த விரதங்களை கடைப்பிடியுங்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
மாங்கல்ய பாக்கியம் பெற இந்த விரதங்களை கடைப்பிடியுங்கள்!

திருமண வயது பூர்த்தியடைந்தும் ஏதோ ஓர் காரணத்திற்காக திருமணம் தள்ளிபோகலாம். அல்லது உரிய வரன் கிடைக்காமல் போகலாம். இவை என்ன செய்தாலும் மனதிற்குள் ஏதோ ஓர் குறை இருந்துகொண்டே இருக்கும். 

இவ்வாறான சங்கடங்கள் தீர்க்க ஆன்மீகத்தில் சில விரத வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றை மானசீகமாக மேற்கொள்ளும் போது அதற்குறிய பலன்களை நாம் பெறலாம். அவ்வாறான இரு விரத முறைகளை சுருக்கமாக தருகிறோம்.

சுக்ர வார விரதம்: 

நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும் .

தெய்வம் : பார்வதி தேவி 

விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்

 பலன் : மாங்கல்ய பாக்கியம்

 நவராத்திரி விரதம் 

நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை 

தெய்வம் : பார்வதிதேவி 

விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.

 பலன் : அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்