சுவிஸில் மனைவியை தாக்கிய கணவனிற்கு சிறைத்தண்டனை!
#Arrest
#Switzerland
#swissnews
Mayoorikka
10 months ago

சுவிஸில் பீட்ஸாவிற்கு பதிலாக வேறொரு உணவினை வாங்கி வந்த மனைவியை தாக்கிய கணவனை குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Laufen BL என்ற குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த குறித்த நபருக்கு குறித்த குற்றத்திற்காக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அவரது தாயார் கொண்டு வந்த பீட்சாவிற்கு பதிலாக கடையில் வாங்கிய டூரம் ஒன்றை அவரது மனைவி அவருக்கு வழங்கியதால், அவர் அவரை தாக்கியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 24, 2023 அன்று அவர் தனியார் வங்கி ஒன்றில் வைத்து தனது மனைவியை மிக மோசமான முறையில் அவமதித்து தாக்கியதால் காரணமாக அவருக்கு தற்பொழுது குறித்த சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் குடும்ப வன்முறைக்கு எதிரான கற்றல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வேண்டும்.



