பனியுடன் கூடிய வானிலை காரணமாக விபத்துக்குள்ளான விமானம்
#Flight
#Crash
#Climate
#snowstorm
Prasu
1 year ago

துருவ பகுதியில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக An-23 ரக விமானம் ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது.
குறித்த விமானத்தில் நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர்.
‘உலகின் முடிவு’ என்று அழைக்கப்படும் ஆர்கிட்க் பகுதியில் அமைந்துள்ள Utrenniy விமான நிலையத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரஷ்யாவின் வடக்கே புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தில், அடர்ந்த மூடுபனி மற்றும் பனியில் தரையிறங்க முயன்றபோது, ரேடார் திரைகளில் இருந்து Utair விமானம் மாயமானது.
விமானத்தில் 36 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



