எலான் மஸ்க்கின் சம்பள உயர்வு அழைப்பை ஏற்ற பங்குதாரர்கள்
#ElonMusk
#Salary
#Tesla
Prasu
1 year ago
எலோன் மஸ்க்கிற்கு சாதனை சம்பளம் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஸ்க் பல மாதங்களாக சம்பள உயர்வுக்கு அழைப்பு விடுத்து, இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், “ஹாட் டேம், ஐ லவ் யூ தோழர்களே.” என அவர் பதிலளித்துள்ளார்.
டெஸ்லாவின் தலைமையகமாக கருதப்படும் டெக்சாஸில் நடைபெற்ற பங்குதாரர்களின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அதன்படி, அவரது சம்பளம் சுமார் 56 பில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது