மலாவியின் துணை ஜனாதிபதி உள்ளிட்ட 09 பேர் பயணித்த விமானம் மாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மலாவியின் துணை ஜனாதிபதி உள்ளிட்ட 09 பேர் பயணித்த விமானம் மாயம்!

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் நேற்று (10.09) காலை தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட பின்னர் ராடார் அமைப்பிலிருந்து வெளியேறியதாகவும் தொடர்புடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்தார். 

படையினர் தொடர்ந்தும் தரையில் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும், விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை நடவடிக்கை தொடர வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நெஞ்சை உலுக்கும் விடயம் எனவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!