மெக்சிகோவில் பறவை காய்ச்சலுக்கு நபர் ஒருவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இதுவாகும். 59 வயதான அந்த நபருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை.
ஆனால் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களைத் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



