பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்கள்

#India #PrimeMinister #World #NarendraModi #leader
Prasu
1 year ago
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்கள்

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. 

ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.

இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 

வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன. பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக பெற்றுள்ளது. 

ஆனாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதற்கிடையே, பிரதமர் மோடி 3வது முறை பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தென் கொரியா அதிபர் யூன் சுக் ரியோல், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கால்ப்ஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒன்றாகப் பணிபுரிய விருப்பம் உள்ளதாக உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!