WC - 96 ஓட்டங்களுக்கு சுருண்ட அயர்லாந்து அணி
#India
#T20
#Cricket
#WorldCup
#Ireland
Prasu
10 months ago

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் டெலானி அதிரடியாக விளையாடி அயர்லாந்து கவுரமான நிலையை எட்ட உதவினார்.
வெறும் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ், அக்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.



