மத்திய காசா பகுதியில் புதிய இராணுவ நடவடிக்கையை தொடங்கிய இஸ்ரேல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மத்திய காசா பகுதியை மையமாக கொண்டு புதிய ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வான்வழித் தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன மருத்துவத் துறைகள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.